நாமக்கலில் IJK நிறுவன தலைவர் Dr.பாரிவேந்தர் MP யின் 79வது பிறந்த நாள் விழா- இளைஞர்களின் எழுச்சி நாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் ஆகஸ்ட் 25 

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினரான Dr. பாரிவேந்தரின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் IJK மாவட்ட தலைவர் P.முத்துராஜா தலைமையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது. மேலும் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகளை வழங்கினார். இதில் எருமபட்டி ஒன்றிய செயலாளர் பாண்டியன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் மனோகரன், இளைஞர் அணி வினோத், மாணவரணி சதீஷ் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் வேந்தர் பிறந்த நாளை இளைஞர்கள் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடினார்கள்.

Comments