திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு குடிநீர் லாரி மோதி ஒருவர் பலி


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொடைக்கானல் நகராட்சி குடிநீர் லாரி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து உயர் சிகிச்சைக்காக காயமடைந்த அவரை எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கொடைக்கானல் துணை ஆய்வாளர் திரு மாதவராஜா அவர்கள் தன்னுடைய சொந்த வாகனத்தில் எடுத்துச் சென்று கொடைக்கானல் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல்   அனுப்பிவைக்கப்பட்டது போகும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் இருப்பினும் கொடைக்கானல் நகராட்சியில் மிகப் பழமைவாய்ந்த குடிநீர் லாரிஇது. கொடைக்கானல் ரோடு மிகவும் இறக்கமாகவும் மேடாகவும் சரிவாகவும்  காணப்படும் இப்படிப்பட்ட ரோடுகளில் இந்த வண்டி ஓடுவதற்கு தகுதியானவையா என்பதை உறுதி செய்து இருக்க வேண்டும் இருப்பினும் உயிரிழந்த அந்த நபருக்கு கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் தகுந்த இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து,  இருப்பினும் கொடைக்கானல் அண்ணா சாலை ரோடு ஒருவழிப் பாதையாக மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டது அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை, இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருந்திருந்தால் இதுபோல் உயிர்ப்பலிகள் நடந்து இருக்காது இருப்பினும் தக்க சமயத்தில் கொடைக்கானல் துணை ஆய்வாளர் திரு மாதவராஜா அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தன்னுடைய சொந்த வாகனத்தில் எடுத்துச் சென்று அவசர 
 பிரிவில் சேர்த்தது மனிதநேயத்திற்கு இவரே சான்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு உற்ற நண்பன் என்பதை உறுதி செய்து உள்ளார் திரு மாதவராஜ்  அவர்களுக்கு கொடைக்கானல் மக்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள் இருப்பினும் விபத்து ஏற்பட்ட இந்த சாலையில் முற்றிலும் வாகனங்கள் செல்லாதவாறு தடுக்கவேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் காவல்துறைக்கு,

Comments