திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஆகஸ்ட்27 திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர் வழிகாட்டுதலின் பேரில், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் கோளப்பஞ்சேரி ஊராட்சியில் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் பூவிருந்தவல்லி ஒன்றிய பெருந்தலைவர் பூவை.M.ஜெயக்குமார் தலைமையில், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ. ஐந்து லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் D.தேசிங்கு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சிவகாமிசுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாபு மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment