ஸ்ரீமுஷ்ணம் தேமுதிக வினர் உற்சாக கொண்டாட்டம் அசத்தும் கட்சி நிர்வாகிகள்

ஸ்ரீமுஷ்ணம் . ஆகஸ்டு 23 ;

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதி முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். 

வரும் 25 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீமுஷ்ணம் நகர ஒன்றிய பகுதிகளில் அவரை வாழ்த்தி உற்சாகத்தோடு கட்சி நிர்வாகிகள் திரும்பும் இடமெல்லாம் தேமுதிக வின் சுவர் விளம்பரங்களை செய்துள்ளதால்  அப்பகுதி தேமுதிக வினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிறந்தநாள் அன்று பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்யும் பணிகளும் தீவிரபடுத்தி உள்ளதாகவும் , மரகன்றுகள் நடும் பணிகள் , ஏழை எளிய மக்களுக்கும் முடிந்த உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக  ஸ்ரீமுஷ்ணம் பகுதி நகர ஒன்றிய கட்சி நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர் .

Comments