திருப்பத்தூரில் குடிநீர் வசதி கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முதியவர் முயற்சி.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா ஜோலார்பேட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(57) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. ஆனால் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்வதில்லை என கூறி ஊராட்சி செயலரிடம் தனக்கு தனியாக ஒரு குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும் என கோவிந்தசாமி பலமுறை முறையிட்டும் மற்றும் மனு அளித்தும் இதுவரை ஊராட்சி செயலாளர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து கோவிந்தசாமி இன்று தனது குடும்பத்துடன் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊராட்சி செயலரை கண்டித்து குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவிந்தசாமி கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி எடுத்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தசாமி இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் வசதி கேட்டு குடும்பத்துடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..