தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகம் மேம்பாடு அடைய வேண்டி திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு இன்று 30/08/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இணைய வழி பொதுக்குழு கூடி " தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நல கூட்டமைப்பு" என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
விழாவில் கூட்டமைப்பின் கொடி, மற்றும் லோகோ அறிவிக்கப்பட்டது .பொதுக்குழுவில் மாநில தலைவராக. திண்டுக்கல். வழக்கறிஞர். M. முகமது அனஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில செயலாளராக. K.S. செந்தில் குமார், மாநில பொருளாளராக. S.T. முத்துக்குமார், மாநில துணைத்தலைவராக. K. சம்பத் குமார், மாநில துணை செயலாளராக. N. ஜாபர், மாநில துணை செயலாளராக. J. தர்மராஜ், மாநில தலைமை ஆலோசகர். நாகர்கோவில் A. சலீம் , மாநில செயற்குழு உறுப்பினர். Y. ஜபருல்லா கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டமைப்பின் மாநில தலைவர் . திண்டுக்கல். வழக்கறிஞர். முகமது அனஸ் கூறுகையில் ... நாட்டில் மாற்றுத்திறனாளிகள் சமூகம் இன்று வரை வஞ்சிக்கபட்டு வருகிறது,சமூக மேம்பாடு , சட்ட பாதுகாப்பு போன்றவை இன்னும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது, எனவே மாற்றுத்திறனாளிகள் சமூகம், திருநங்கைகள் சமூகம், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் ஆகியோர் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி பெற வேண்டும் என்ற உயரிய கொள்கை கொண்டு ... எந்த விதமான சாதி, மதம், இனம்,மொழி அரசியல் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒத்த கொள்கை உடைய மற்ற மாவட்டங்களில் இருக்கும் சங்கங்களை ஒருங்கிணைப்பு செய்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சமூக சேவகர்களையும், மற்ற தொண்டு நிறுவனங்களையும் நம்மோடு இணைந்து பணி செய்ய அன்போடு அழைக்கிறோம் ... கூட்டத்தின் தீர்மானமாக... கூட்டமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சமூகம், திருநங்கைகள் சமூகம், ஆதரவற்ற பெண்கள் குழந்தைகள் சமூகம் மேம்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது, கொரோனா காலகட்டத்தில் முடிந்த நலதிட்ட உதவிகளை செய்வது , மாநிலம் முழுவதும் தகுதியானவர்களை கண்டறிந்து ஒவ்வொரு மாவட்டம் தொறும் விரைவில் மாவட்ட நிர்வாகத்தை அமைப்பது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர். சின்னாளபட்டி. எம்.ஜி.ஆர். மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்
Comments
Post a Comment