வீடுகளுக்குள் புகும் கழிவு நீர் அலட்சியமாக செயல்படும் கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
கெங்குவார்பட்டி, ஆகஸ்ட் 25:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் செயலற்றுக் கிடக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டிக்கின்றோம் என பொதுமக்கள் புகார்
கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வசிக்கின்ற மக்களின் வீடுகளுக்குள் கழிவு நீர் உட்புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் டெங்கு மற்றும் பிற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த கழிவுநீர் பிரச்சனையை கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கு தெரிவிக்க பலமுறை அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் அலைபேசி அழைப்பை எடுக்கவில்லை அவர் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் எனவும்
இந்தப் பிரச்சனையை கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை எனில் இது சம்மந்தமாக தேனி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்படும் எனவும் இவ்வாறு அலட்சியமாக செயல்படும் கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இத்தகைய சூழலில் இவ்வாறு அலட்சியமாக செயல்படும் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment