கொடைக்கானலில் வேளாண் மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு செயல் விளக்க முகாம் கார்மேல்புரம் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அட்மா திட்டத்தின் மேலாளர் கார்த்திக் சிப்பி காளான் வளர்ப்பு முறை"பற்றியும் அவற்றின் செயல்முறை குறித்தும் விளக்கமளித்தாா்.இந்த செயல் விளக்க நிகழ்ச்சியில் கோவை காருண்யா பல்கலைக்கழக இறுதி ஆண்டு படிக்கும் வேளாண் மாணவ,மாணவிகள் பிளசி லேகா,பிரியா,அரவிந்த் மற்றும் விவசாயிகள் சமூக விலகலோடு கலந்து கொண்டனர் 
தோட்டக்கலை உதவி அலுவலர் நாட்ராயன் நன்றி கூறினார் . இந்த பயிற்சி முகாமானது சிறு தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதாக மாணவர்களும்,விவசாயிகளும் தெரிவித்தனர்.

Comments