திண்டுக்கல் மாவட்டம்
தமிழக மாற்றுத் திறனாளிகள் உரிமை மீட்பு சங்கத்தின் மாநில நிறுவன தலைவர் அப்துல் மாலிக் அவர்கள் தலைமையில் மாநில பொருளாளர் நத்தம் சிறந்த சமூக பணியாளர் விருது பெற்ற கே.எஸ்.எஸ் முபாரக் அலி அவர்களுடன் சங்க உறுப்பினர்களுடன் (நேற்று) திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி திட்ட அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்தது!
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசாணை எண் 52 ன் படி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகள் 4 மணி நேரம் பணிபுரிந்தால் முழு சம்பளம் விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு பஞ்சாயத்துக்களில் பணி வழங்கப் பட வேண்டும் என்ற அரசு உத்தரவை மதிக்காமல், மாற்றுத் திறனாளிகளை நத்தம் யூனியன் பகுதியில் உள்ள 23 பஞ்சாயத்துகளிலும் 8 மணி நேர பணிக்கு நிர்பந்தம் செய்யும் நத்தம் யூனியன் அலுவலக நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே நத்தம் நீதிமன்ற இலவச சட்டப் பிரிவில் வழக்குத் தொடரப்பட்டு யூனியன் ஆபீஸ் நிர்வாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பஞ்சாயத்துகளில் நூறு நாள் வேலைத்திட்ட பணி தர சம்மதிக்கும் என எழுதிக் கொடுத்து சென்ற யூனியன் அலுவலக பணியாளர்,
மீண்டும் அதனை மதிக்காமல் மாற்றுத்திறனாளிகளை 8 மணி நேர பணி வேலைக்கு அலைக்கழித்தல் என தொடர்ந்து ஈடு வருவதை கண்டித்து மாநிலத் தலைவர் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்
பட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட அலுவலகப் பணியாளர் அவர்களிடம் முறையாக மனு செய்யப்பட்டது.
அதனை ஏற்று நத்தம் யூனியனில் உள்ள 23 பஞ்சாயத்துகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் பணி வழங்கவும் முழு சம்பளம் வழங்கவும் விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு பஞ்சாயத்துகளில் நூறு நாள் வேலைத்திட்ட பணி வழங்கவும் உதவுவதாகவும் அவர்கள் வரும் வியாழக்கிழமை பணிசெய்ய செல்ல உதவுவதாகவும் உறுதிமொழி அளிக்கப்பட்டதின் அடிப்படையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.
அதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள்
இந்த உறுதிமொழி தவறும் பட்சத்தில் போராட்டம்,நடத்தவும் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Comments
Post a Comment