கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு அடி உயரமுள்ள மூலிகை விதைகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக வருடந்தோரும் விநாயகர் ஊர்வலம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா எதிரொலியாக விநாயகர் சதுர்த்தியன்று ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  இன்று வெளியூரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை விதைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு அடி உயரமுள்ள 1500 விநாயகர் சிலைகளை கொடைக்கானலில் நாயுடுபுரம், பூம்பாறை, மன்னவனூர், கூம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு  இந்து முன்னணி சார்பில்  வழங்கப்பட்டது. இந்த  மூலிகை விதைகளால் தயாரிக்கப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது சிலைகளில் உள்ள மூலிகை  விதைகள் மூலமாக நீர்நிலை கரையோரப்பகுதிகளில் இயற்கையாகவே மூலிகை செடிகள் வளரும் விதமாகவும், இயற்க்கைவளத்தை பாதுகாக்கும் விதமாகவும்   தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் தற்போது கொரோனா எதிரொலியாக விநாயகர் சதுர்த்தி அன்று  சிலைகள்  ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ள  இந்த நிலையில் பொதுமக்கள் விநாயகரின் சிலைகளை தங்களது வீட்டில் வைத்து வழிபட்டு, அவர்களது வசதிக்கேற்ப அருகே உள்ள  நீர் நிலைகளில் கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வின் போது ஆறுமுகம் இந்து முன்னணி தலைவர், செந்தில் குமார் இந்து முன்னணி பொது செயலாளர், தட்சிணாமூர்த்தி  ஆர் எஸ்.எஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Comments