தர்மபுரியில் பேருந்து நிலையம் காமராஜ் சிலை அருகில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த் குமார் மறைவிற்கு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
தருமபுரி சின்னசாமி நாயுடு தெருவில் அமைந்துள்ள காமராஜர் சிலை முன்பு காங்கிராஸ் கட்சியின் நகர தலைவர் செந்தில்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்தகுமார் அவர்கள் மறைவிற்கு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவர் இரா. வேணுகோபால், வேடியப்பன், சேகர், அர்தநாரி, ராஜா, டியுஜே மாநில துணைத் தலைவர் கே. மணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர் அதேபோல் தருமபுரி பாரதிபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஐஎன்டியுசி மத்தி சங்கத்தினர் மண்டல தலைவர் சென்னகேசவன் தலைமையில் மறைந்த திரு. வசந்தகுமார் அவர்கள் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இதில் பொதுச் செயலாளர் தங்கவேல், இணைச் செயலாளர் மாதையன் மற்றும் ஐஎன்டியுசி சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment