வேதாரண்யம் அருகே இரவு நாய்க்கு விஷம் வைத்து கொன்று விட்டு மூதாட்டியிடம் நகை, பணம் கொள்ளை

வேதாரணியம் ஆகஸ்ட் 20.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில் கல்யாணி (வயது 85)என்ற மூதாட்டி கணவன் இறந்த நிலையில்  கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார் .

இந்த நிலையில் நேற்று இரவு 3மணி அளவில் இரண்டு  மர்மநபர்கள் கல்யாணி அவர்கள் வளர்த்த நாயை விஷம் வைத்துக் கொன்று விட்டு பின்பு வீட்டுக்கு பின்புறம் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி வாயில் துணியை வைத்து அடைத்து அவர்கள் அணிந்திருந்த தங்க ஜெயின் வளையல் ஆகிய ஆறரை பவுன் நகைகளையும் பீரோவில் வைத்திருந்த 7000 பணத்தையும் அவர்கள் வீட்டில் இருந்த எல்.இ.டி டிவியையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்

 பின்பு மூதாட்டி சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது நாயை விஷம் வைத்துக் கொன்று மூதாட்டியிடம் கொள்ளை அடிப்பது தெரியவந்தது.

 இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.செய்தி 1 படம் 1.

Comments