திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான கண்ணதாசன் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஆகஸ்ட் 17 திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தவர் கண்ணதாசன், இவர் தலைவராக பதவி வகித்த காலகட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வந்ததால் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அவரது மனைவியை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் நிற்க வைத்து தற்போது அவரது மனைவி லோகம்மாள் கண்ணதாசன் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடன் இருந்த அவர் திடீரென இன்று மாலை உடல்நலக்குறைவால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments
Post a Comment