ஸ்ரீமுஷ்ணம் பிரசித்தி பெற்ற பூவராக பெருமாள் சன்னதியின் திருகுளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.குளத்தில் கழிவு நீர் கலந்திறக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
வெளி ஊரிலிருந்து வரும் பக்தர்கள் தெப்ப குளத்தை புனித நீராக வழிபட்டு வரும் நிலையில் உள்ளூர் வாசிகள் கோவில் அருகிலேயே கழிவுகளை கழித்து தெப்ப குளத்தில் கலக்கின்றனர் ,
சிலர் துணிகளை துவைத்து அசுத்தம் செய்கின்றனர் , தெப்ப குளத்தில் கழிவுகளை கலக்கபடுவதால் துர்நாற்றம் வீசி மோசமான நிலையில் குளம் உள்ளதாகவும்,மீன்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியாத நிலையில் விரைவில் குளம் சுத்தபடுத்தவும் ,கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
வெளியூர் பக்தர்கள் புனித நீராக வணங்கி நீரை எடுத்து செல்கின்றனர் , ஆனால் உள்ளூர் வாசிகள் சிலரின் மிக மோசமான செயல்களால் தெப்ப குளம் வெளியூர் பக்தர்களின் மத்தியில் முக சுளிர்ப்பிற்கு உள்ளாகியுள்ளது .
கோவில் நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பொதுமக்கள் திருந்தினால் மட்டுமே குளம் புனித நீராக தொடரும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .
Comments
Post a Comment