திண்டுக்கல்லில் தடையை மீறி நடக்கவிருந்த வினாயகர் ஊர்வலம் காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டது!
திண்டுக்கல் குடை பாறைப்பட்டியை சேர்ந்த இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் என் பவர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்ல வீட்டிலிருந்து புறப்பட்ட வரை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சிலையை கைப்பற்றி,பேச்சு வார்த்தை நடத்தினர், பேச்சு வார்த்தை பலன் அளிக்கவில்லை
அதனைத் தொடர்ந்து அவருடன் வந்த சங்கர்கணேஷ் தலைமையிலான ஆறு நபர்களை கைது செய்தனர்.
மேலும்
இந்து முன்னணியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட விநாயகர் சிலை திண்டுக்கல் கோட்டை குளத்தில் வருவாய்த் துறையினரால் கரைக்கப்பட்டது.
Comments
Post a Comment