கள்ளக்குறிச்சி ஆகஸ்ட் 17
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள
அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டமான பிஎம் கிசன் சம்மன் நிதி பணப்பரிவர்த்தனையில் மிகப் பெரும் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வரப்பட்டுள்ளதை தொடர்ந்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அந்தந்தக் குக்கிராம வருவாய் ஆய்வாளர்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை நியமித்து விசாரணை நடத்தவும் விசாரணையினை மேற்பார்வையிட வட்டாட்சியர் வேளாண் துறை உதவி இயக்குனர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்துள்ளார்
விவசாய நிலம் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 என மூன்று தவணையாக செலுத்த மத்திய அரசு 1 -12- 2018 ஆம் ஆண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறுகிறார்கள் என புகார் எழுந்ததால் பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரி களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது
இதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்ட வேளாண் துறையில் பணிபுரியும் கீழ்நிலை பணியாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்கென ஒன்றிற்கு மேற்பட்ட ஏஜெண்டுகளை தேர்ந்தெடுத்து அவர்களின் மூலம் ஒரு நபருக்கு 700 முதல் 1000 வரை பணம் பெற்றுக்கொண்டு அவர்களுடைய ஆதார் நகல் , வங்கி புத்தகம் , கைபேசி எண் இவைகளை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து விடுகின்றனர்
யார் மூலம் பதிவு செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை ஆனால் இவர்களுக்கு 15 நாட்களுக்குள் பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் வந்து சேர்கிறது .
இது தொடர்பாக திருநாவலூர் வேளாண் உதவி இயக்குனரை நேரில் சென்று கேட்டபோது இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்றும், யார் மூலம் இது போன்ற வேலைகள் நடைபெறுகிறது என்றும், இந்த ஐடி எங்களுடையது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வேளாண் உதவி இயக்குனருக்கே தெரியாமல் இவ்வாறு நடைபெறுவது என்பது வியப்புக்குரிய தாக உள்ளது.
இதுபோன்று சில சமூக விரோதிகளின் மூலம் செயல்படும் முறை கேட்டால் உண்மையிலேயே நிலம் உள்ள விவசாயிகள் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் 14 - 04- 2020 ஆம் தேதி அன்று வருவாய் ஆய்வாளர்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை நியமித்து கடந்த 01-04 -2020 பிறகு இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளை கூட்டாக கள ஆய்வு நடத்தி யார் விவசாய நிலம் அல்லாதவர்கள் என்றும் இத்திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு இணைந்த பயனாளர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி கண்டறிந்து வரும் 18-04- 2020 ஆம் தேதியன்று படிவம் 1 ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
விசாரணை முறையாக நடைபெற அந்தந்த வட்டாட்சியர் அவர்களையும் வேளாண் துறை உதவி இயக்குனர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்துள்ளார் மேலும் இப்பணியில் கணக்கும் காட்டும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
Comments
Post a Comment