பெரியகுளத்தில் தமிழ் நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பெரியகுளம், ஆகஸ்ட் 14: தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் தற்போது கொண்டு வரப்பட உள்ள மின்சார திருத்தச்சட்டம் 2020.அத்தியாவசிய பொருள்கள் அவசரச் சட்டம் 2020.வேளாண் சேவை ஒப்பந்தச் சட்டம் 2020.வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம் 2020 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கைவிடக்கோரிஆன்லைன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் சித்ராதேவி தலைமை வைத்தார்  மேலும்  இந்த போராட்டத்தில் ஏழை மக்களை விவசாயிகளை .குடிசைத் தொழில் செய்கின்ற தொழிலாளர்களை ,விவசாயம்  சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் ஏழை மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்தும்  தமிழக அரசுக்கு உள்ள உரிமையை மத்திய அரசு பறிப்பதை கைவிடக் கோரியும்  மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக  பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
போராட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு வைசேர்ந்த பத்மாவதி மல்லிகா மற்றும் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில்,சுசிலா.மேரிவசந்தி ஆராய்ச்சிமணி.உள்ளிட்ட 25 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு கவனயீர்ப்பு ஆன்லைன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.