திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஆகஸ்ட் 16 திருவள்ளூரில் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 74 ஆவது சுதந்திரதின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்பு வித்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள் உடன் காவல் உயரதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய பொறுப்பு வகிக்கும் அலுவலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைப்படி காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து திரும்பி பணிக்கு வந்த காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் அதேபோல் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சான்றிதழும் கொடுத்து கௌரவித்தார் மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் துப்புரவு பணியாளர் களுக்கும் சான்றிதழைக் கொடுத்து கௌரவித்தார் இன்று 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களும் வெள்ளை புறாவை வானில் பறக்கச் விட்டனர் அதனைத்தொடர்ந்து வண்ண பலூன்கள் வானில் பறக்கவிட்டனர் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் சான்றிதழைக் கொடுத்து கௌரவித்து அவர்கள் இவ் விழாவினை சிறப்பித்து சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த சுதந்திர தின விழாவை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.