தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை ஊராட்சி புதுக்காலனி கிராமத்தில் 5 முதல் 9 வது வார்டு வரை,சுமார் 20 வருடங்களாக அடிப்படை வசதியான சாக்கடை கழிவு நீர் கால்வாய் வசதி, தெரு சாலைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.பெண்களுக்கு என்று போதிய கழிப்பறை வசதி தற்பொழுது வரை இல்லை. மேலும் சாக்கடை கழிவு நீர் செல்ல சாக்கடை கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் சாக்கடை கழிவு நீர் தெருக்களின் நடுவில் செல்வதால் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தினை உருவாக்குகின்றது. இத்தகைய காரணத்தினால் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மிகுந்த மாசுபாடு அடைகின்றது. தற்பொழுது தென்மேற்கு பருவ மழை பொழிந்து வருவதால் , இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்களுடைய உரிமை தற்பொழுது வரை கனவாக இருக்கின்றது. ஆகையால் பொது மக்களின் நலன் கருதி புதிய சாக்கடை கட்டமைப்பு மற்றும் கழிவு நீர் செல்ல முறையே வசதி ஏற்படுத்தி தருமாறும் பெண்களுக்கு என பொது கழிப்பறை வசதி கட்டி தர வேண்டும் எனவும், தெருக்களில் சாலை வசதியை அமைத்து தர வேண்டும் என்றும் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீப்பாலக் கோட்டை புதுக்காலனி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி அமைத்து தருமாறு சமூக ஆவலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment