சாத்தூர் சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் இறந்தவர்கள் உடல்களை எரிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கியதால் உறவினர்கள் சுடுகாட்டில் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே
படந்தால் கிராமத்தில் சத்தியாகாலனியில் வசித்து வருபவர்கள்
ராமமூர்த்தி (51) பாலமுருகன் (44) இவர்கள் கூலி வேலை செய்து வருபவர்கள்
இவர்கள் படந்தால் பகுதிகளில்
இறக்கும் நபர்களின் உடல்களை சுடுகாட்டில் புதைப்பதும் எரிப்பதும் இவர்களே.அதே போல் நேற்று முன் தினம்
படந்தால் கிராமத்தில் வயதான பெண்
இறந்துள்ளார். அவரின் உடலை வழக்கம்
போல் நேற்று முன் தினம் இரவு எரித்துள்ளனர். அப்போது அந்த பகுதியை
சேர்ந்த குட்டராஜ் ,ஆல்பட்டு ,சதீஸ்,ஆகியோர் சுடுகாட்டிற்க்கு வந்து உடல்லை எரிக்கும் பணியில் இருந்த ராமமூர்த்தி ,பாலமுருகன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.அதன் பின்பு
அவர்கள் இருவரின் வீட்டிற்கு சென்றும் அவர்களின் குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர். இன்று படந்தால் அருகே
மருதுபாண்டிநகரில் ரவீந்திரன்(65) என்பவர் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார் .அவரின் உடலை இன்று
சுடுகாட்டில் எரிக்க மறுத்து .நேற்று எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்யுவேண்டும்
என வலியுறுத்தி ராமமூர்த்தி மற்றும் பாலமுருகன் உறவினர்கள் இரவு சுடுகாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டம் நடத்தியவர்களிடம் சாத்தூர் டி எஸ்.பி இராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை
நடத்தினார்.அப்போது தாக்குதல் நடத்தியவர்களை இரவே கைது செய்து
அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தார். அதன்
பின்பு போராட்டம் செய்தவர்கள் கலைந்து
சென்றனர்.
Comments
Post a Comment