கள்ளிமேடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி பக்தர்கள் வழிபாடு.
வேதாரணியம் ஆகஸ்ட் 15.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் சுற்றுப் புற கிராமங்களிலிருந்து ஏரள மான பத்தர்கள் வழிபடுவது வழக்கம். தற்போது கொரோண வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசின் உத்தாவை சிறிதும் கண்டுகொள்ளாமல் , கோவில் பூட்டியிருந்தாலும் இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்று அம்மனை வழிபட்டு வருகின்றனர்....