திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சுகுழிபட்டி கிராமத்தில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாணார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பொன் குணசேகரன் அவர்கள்  மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வாசு அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Comments