ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மிக நீண்ட நாட்களாக , பல மாணவர்களை சாதனை மாணவர்களாக உயர் இடத்தில் செல்ல உதவிய பெரும் காரணம் பொன்விழா கண்ட த.வீ.செ மேல்நிலை பள்ளி,
தற்போதய கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கபடாத நிலையில் , தமிழகமெங்கும் பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் முகசுளிப்போடு நடந்து வரும் தற்போதய சூழ்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ மேல்நிலை பள்ளியின் தாளாளர் NVS.செந்தில்நாதன் அறிவுறத்தலின் படி மாணவர்களின் பகுதிக்கே சென்று பாடங்களை சொல்லி தர வேண்டும் என அப்பள்ளி ஆசிரியர்களின் முயற்ச்சியால் 40 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து அனைத்து பகுதிக்கும் நேரில் சென்று மாணவர்களக ஒருங்கிணைத்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் , பாடதிட்டங்களை விளக்கியும் கல்வியை மாணவர்களுக்கு போதித்து வருகின்ற செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெருவில் ஆலமரத்தின் அடியில்
ஒன்றிணைந்த மாணவர்கள் மத்தியில்
நேரில் சென்ற த.வீ.செ பள்ளி ஆசிரியைகளான சித்ரா மற்றும் காமாட்சி ஆகியோர் வகுப்புகளை மேற்கொண்டனர் ,
அவர்கள் கூறுகையில் , தங்கள் பள்ளி தாளாளர் அவர்கள் கூறியபடி மாணவர்களை நேரில் சந்தித்து கல்வி கற்று கொடுப்பதோடு தற்போதய கொரோனா வை எதிர்கொள்ளும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம் , மாணவர்களின் நலன் கருதி முக கவசம் , சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைத்து பாடங்களை நடத்துகிறோம் எனவும் ,இது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு , மாணவர்களுக்கும் ஒரு புதிய சூழ்நிலையில் கல்வியை கற்று தருவதால் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் பங்கேற்பதாக கூறுகின்றனர் .
Comments
Post a Comment