திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்ற விடாமல் அவமதிப்பு பெரும் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஆகஸ்ட் 21
திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துப்பக்கம் ஊராட்சிமன்ற தலைவர் அமிர்தம் அவர்களை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு கொடி ஏற்ற சென்ற கொடியை ஏற்ற கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கள் சிலர் அதைத்தொடர்ந்து கொடியை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது ஜாதி அடிப்படை கொண்டுகொடியேற்ற விடாமல் தடுத்ததாக கொடி ஏற்ற படாமல் இருந்தனர் அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் பிரமுகர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் மனித உரிமை ஆணையத்திற்கு தெரிவித்தனர் அதனை தொடர்ந்து இன்று எங்கு கொடி ஏற்ற மறுத்தார்கள் அந்தப் பகுதியிலேயே கொடியேற்ற இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களின் முன்னிலையில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களுடன் இன்று ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எதிரில் உள்ள கொடிமரத்தின் இன்று அமிர்தம் தேசிய கொடி ஏற்றினார் இதுபோன்ற சாதி பாகுபாடு காட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது இதனடிப்படையில் கொடியேற்றி விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முதலாவதாக ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர் அதனைத்தொடர்ந்து மேலும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Comments
Post a Comment