மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து

 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியம் பரிக்கல் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மாசிலாமணி என்பவர் வீடு மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த வருவாய்த்துறை சேர்ந்த பரிக்கல் கிராம உதவியாளர் பாபு அவர்கள் திருநாவலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சுந்தரேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தன் வீடு எரிந்தது தெரியாமல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு வந்து பார்த்ததும் மாசிலாமணி கதறி  அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.