சாத்தூர் அரசு தொழில் பயிற்சி மையத்தைகனொலியில் திறந்து வைத்த முதல்வர்

சாத்தூர் ஆக 15,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காமராஜபுரத்தில்  அரசு தொழிற் பயிற்சி
மையம் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித
வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு 
வந்தது. கடந்த ஆண்டு தொழிற்பயிற்சி
மையம் கட்டுவதற்கு சாத்தூர் அருகே
வெங்காடசலபுரம் கிராமத்தில்  அரசுக்கு
சொந்தமான நிலத்தில் தமிழக அரசு
ரூ 7.30 கோடி ஒதுக்கி பூமி பூஜை செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.
அதன் பணிகள் அணைத்தும் முடிவடைந்து
 தமிழக முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமி அவர்கள் சென்னையில் இருந்து கானொலி காட்சி மூலம்  தொடங்கி
வைத்தார். அதன்பின்பு சாத்தூர் சட்டமன்ற
உறுப்பினர் ராஜாவர்மன்  குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி மைய
முதல்வர் சுபாஷ் சந்திர போஸ். சாத்தூர்
தாசில்தார் ராமசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி, ஆகியோர் கலந்து கொண்டனர்.