இரண்டு முதல்வர்களால் நேரில் அழைத்து பாராட்டப்பட நேதாஜி இந்திய தேசிய படையின் பெண் கமாண்டர்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாரிப்பில் மரியாதை செலுத்தப்பட்டது
தர்மபுரி ஆகஸ்ட் 15 தர்மபுரி மாவட்டம் .அன்னசாகரம் கிராமத்தில் சிவகாமி அம்மாள் (87) இவர் 1942ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை விடுதலை போராட்டத்திற்கு போராடிய நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி படையில் பெண்கள் படைபிரிவிற்கு தலைமையேற்று நடத்தியவர் .அப்பொழுது அவருக்கு வயது 11 என்பதே.
விடுதலைபோராட்ட காலத்தில் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் விடுதலை வேட்கைக்கு தங்களால் முடிந்த போராட்டங்கள் செய்து வந்த நிலையில் சிவகாமி அம்மாள் நேதாஜியால் தோற்றுவிக்கப்பட்ட "பாலக்சேனா"என்ற இளைஞர் குழுவையும் தோற்றுவித்தார்.அக்குழுவில் இணைந்த இவர் ஆங்கிலேயருக்கு எதிராக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக சமூகநல இல்லம் நோதாஜியின் படை நடத்தியது.அந்த இல்லத்திற்கு பொருளுதவிக்காக சிவகாமிஅம்மாள் "வீரவனிதா" எனும் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பங்கேற்று நேதாஜியால் நேரடியாக கண்டு களித்து பெரிதும் பாராட்டை பெற்றார்.இந்த நாடகத்தால் பல்லாயிரக்கணக்கான தொகை கிடைத்தது.
இந்த நாடகம் நேதாஜியால் பெரிதாக கவர்ந்ததால் இயக்கத்திற்கு தகுந்த பிரச்சார வலிமை நிறைந்த நாடகத்தை பர்மாவிலும் அரங்கேற்ற சிவகாமி அம்மாவை நோதாஜி பர்மாவிற்கு அழைத்துள்ளார்.ஆனால் நாடக குழுவை விட்டு பிரிய மனமில்லாத காரணமாக அவர் செல்லவில்லை.
பின்னர் நேதாஜி வேறு பணிகளுக்கு இவர் அமர்த்தப்பட்டார்.ராணுவ அணிவகுப்பு. ஆர்டர்கள் கொடுத்தல்.உடற்பயிற்சி செய்து காட்டல்.என பல்வேறு பணிகளை இவர் செய்ததை பார்த்து மீண்டும் சிங்கப்பூருக்கு சிவகாமி அம்மாவை நேதாஜி அழைத்து சென்றார்.சிங்கப்பூரில் ராணுவ அணிவகுப்பில் ஜான்சிராணி படையினை தலைமையேற்று அணிவகுத்து அவருக்கு நோதாஜி பெருமை சேர்த்தார்.
மேலும் போர்க்கலங்களில் காயம்பட்ட வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்தல்.யுத்த களத்தில் காயமடைந்து மயக்கமடைந்தவர்களை மீட்டுதல்.அவர்களை முகாம்களுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை இந்திய தேசிய ராணுவத்திற்கு செய்துள்ளார்.ஒருமுறை இவர்கள் தங்கியருந்த முகாமிற்கு நோதாஜி பார்வையிட வந்தபொழுது எதிர்அணியினரின் வெடிகுண்டுகள் தாக்குதல் நடத்த பொழுது நோதாஜி சிவகாமி அம்மாவை தன்னுடன் அழைத்து சென்று காப்பாற்றியதை இன்றும் பலரிடம் பெருமையாக சொல்லி வருகிறார்.
யுத்த முடிவில் பிரிட்டிஷ் படையினர் இவர்கள் தங்கியிருந்த சமூக நலவிடுதியை கைப்பற்றிய சமயத்தில் பிரிட்டீஷ் படையினர் இவரை நடனமாட வற்புறுத்தியுள்ளனர். அதனை மறுத்த இவர் பிரிட்டீஷ் படைகளுக்கு முன்பு நடனமாட நான் பயிற்றுவிக்கவில்லை என கூற விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும் சிங்கபூரில் சமூகநல இலாகாவில் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.இவரது கட்டுப்பாட்டின் கீழ் 2000 ஏக்கர் விவசாய பண்ணையும் இருந்தது.அதோடு பிரச்சார பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.இறுதியில் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு மூன்று மாதகாலம் சிறையில் இருந்து நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவரது சுதந்திர போராட்ட சேவையை பார்த்து இவருக்கு பெருமை சேர்க்க மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜயலிலதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் நேரில் வரவழைதது செப்பு பட்டயங்கள் வழங்கியும் பரிசுபொருட்கள் வழங்கியும் கவுரவித்துள்ளனர்.தற்பொழுது வயது மூப்பு காரணமாக சற்று செவித்திறன் குறை்நது காணப்பட்டாலும் மனதளவிலும் குரல் அளவிலும் கம்பீரமாகவே காணப்படுகிறார்.
பருவ வயதில் மணமுடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் கணவனை இழந்த இவர் விதவையாகவே வாழ்ந்து வருகிறார்.தற்பொழுது தன் உடன் பீறந்த சகோதரன் வீட்டில் அவர்களது அரவணைப்பில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார் அவரை சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் D. K. ராஜேந்திரன் மேற்கு மாவட்ட செயலாளர் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நினைவு சின்னம் வழங்கி மரியாதை செலுத்தினார். பளர்.ரவிக்குமார் ஒன்றிய செயலாளர், D. M. கோகுல்ராஜ் மாவட்ட இளைஞரணி, பார்த்திபன் மாவட்ட மாணவரணி, வேலாயுதம் மாவட்ட நெசவாளர் அணி, ராஜா கார்மெண்ட்ஸ், மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.