ஆம்பூர் அருகே தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு உமராபாத் காவல்துறையினர் விசாரணை


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  அயித்தம்பட்டு பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை  இயங்கி வருகிறது இதில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஆம்பூர் மோட்டு கொல்லை  வாத்தி மனை பகுதியை சேர்ந்த ஜமீல் அஹ்மது என்பவர்  திடீரென இயந்திரத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் படுகாயமடைந்தார் உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பரிசோதனை செய்த மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments