திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்துபாராட்டு சான்றிதழ் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று (15.08.2020)   இவ்விழாவில்  ஆணையர் திரு. சு.சிவசுப்பிரமணியன்அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
 
  மாநகராட்சியில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரானா  நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த  மருத்துவ அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்,               சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் உதவியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள்,     தூய்மை பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்டம் பரப்புரையாளர் மற்றும் பொது  சுகாதார மேலாளர் உள்ளிட்ட 45 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்.
 
  திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில்  மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து நிறைவு செய்த 11 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.  பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய  பிறகு  காந்தி சந்தைஅருகில்  போர் வீரர்கள் நினைவு  தூணிற்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள். மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர் நல அலுவலர் மரு. எம்.யாழினி,  செயற் பொறியாளர்கள், பி.சிவபாதம்,ஜி.குமரேசன், உதவி ஆணையர்கள் ச.நா.சண்முகம், தயாநிதி, திருஞானம் , கமலகண்ணன்  மற்றும்  உதவிசெற்பொறியாளர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.