உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் நகராட்சிக்குப்பட்ட சீப்பாலக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள புதுக்காலணியில் 5வது வார்டில் குடியிருப்பு வீடுகளுக்கு நடுவில் பல வருடங்களாக மொட்டை கிணறு மூடப்படாமல் உள்ளது. மேலும் இதிலுள்ள குப்பை கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்ல போதிய கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் கிணற்றினுள் வெள்ள நீர் பெருகி குடியிருப்பு பகுதிக்குள் புகுவதால் சுகாதார கேடு உருவாகிறது. இந்நிலையில் சீப்பாலக் கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஊருக்குள் இருக்கும் மக்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய கிணற்றை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment