தர்மபுரி 74வது சுதந்திர தினம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
தர்மபுரி
நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியரை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆர் ராஜன் வரவேற்று தேசியக்கொடி வைக்கப்பட்டுள்ள மேடைக்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிட்- 19 சிறப்பான முறையில் பணியாற்றிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பணக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன் மற்றும் மாவட்ட அரசு துறை அரசு அதிகாரிகள் சுகாதார அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.