வாணியம்பாடியில் புதிய பொலிவுடன் மற்றும் நவீன வசதிகளுடன் 300 படுக்கை கொண்ட கொரானா சிகிச்சை மையம் இனிதே துவக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் நமது மாவட்ட ஆட்சியர் திருமிகு.M.P.சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமிகு.P.விஜயகுமார் அவர்களின் ஆணைக்கிணங்க,திருப்பத்தூர் துணை இயக்குநர்,சுகாதார பணிகள், திருமிகு.K.S.T.சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இசுலாமிய பெண்கள் கல்லூரியில் புதிய பொலிவுடன் மற்றும் நவீன வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் இனிதே துவங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி
சுப்ரமணியம், நகராட்சி
ஆணையர் திரு.கா.சென்னு கிருஷ்ணன்,ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி,
வாணியம்பாடி அரசு மருத்துவர்கள,
S.சிவ சுப்ரமணியம், S.நேதாஜி,
நகராட்சி பொறியாளர்
திரு.சு.பாபு, மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்...
Comments
Post a Comment