சாத்தூர் அருகே பட்டாசு கடையில் திடீர் தீ விபத்துநான்கு வழி சாலையில் 1 மணிநேரம் போக்கு வரத்து நிறுத்தம்
ஆகஸ்ட் 21,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழி சாலை நள்ளி கிராமத்தில்
கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் (57)
என்பவருக்கு சொந்தமான பட்டாசு விற்பணை செய்யும் கடை வைத்துள்ளார்
தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால்
போக்குவரத்து மிக குறைவாகவே உள்ளது
அதனால் பட்டாசு வியாபாரம் இல்லாததால்
கடை மூடியே இருந்து வருகிறது.நேற்று இரவு 8 மணியளவில் பூட்டி இருந்த கடையின் உள் பகுதியில் இருந்த பட்டாசுகள் தீ பிடித்து வெடிக்க தொடங்கின. பட்டாசு
வெடிக்கும் சப்தம் கேட்டு அருகில் இருந்த
வர்கள் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
அதன் பின்பு அங்கு சென்ற தீயணைப்பு
துறையினர் தீ பிடித்து எரிந்த பட்டாசுகளை தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன் பின்பு ஜெ சி பி
இயந்திரம் வரவழைக்கபட்டு கடையின்
சுவரை உடைத்து முழுவதுமாக தீயை
அணைத்தனர்.நான்கு வழிசாலையின்
அருகில் இந்த விபத்து நடந்ததால்
தீயை அணைக்கும் வரை 1 மணி நேரம்
போக்குவரத்தை போலிசார் நிறுத்தினர்.
இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது. பட்டாசு கடையில் தீ விபத்தால் 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன சாத்தூர் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விசாரணை செய்து வருகிறார்.
Comments
Post a Comment