கொரோனா தொற்று ஏற்படும் என காரணம் காட்டி ஆகஸ்டு 15 சுதந்திர தினம் அன்று நடக்க இருந்த கிராம சபையை ரத்து செய்ததை கண்டித்தும், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு வழி சாலை எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சென்னை சேலம் வரை எட்டு வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் வலுப்பெற்று வருகின்ற நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணாம்பட்டியில் விவசாய நிலம் ஒன்றில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது  எட்டு வழிசாலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரும் 2025வது வருடத்திற்குள் எட்டு வழிச்சாலையை முடிப்போம் என தெரிவித்திருப்பதை கண்டித்தும், மக்கள் அதிக அளவில் கூடும் சாராய கடையை திறந்து வைத்துள்ள எடப்பாடியின் அரசு கிராம சபை நடத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் என காரணம் காட்டி ஆகஸ்டு 15ல் நடக்க இருந்த கிராம சபையை ரத்து செய்ததை கண்டித்து, எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், இந்திய நாட்டையே பாலைவனமாக்க கொண்டுவரும் (EIA 2020)சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 சட்டத்தை வாபஸ் பெற கோரியும், எட்டு வழிச்சாலையை அச்சாரமாக வைத்து ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு 2020 வரைவு திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Comments