பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 10 மேற்பட்ட இடங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வலைதளம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் சார்பில்மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் சித்ரா தேவி தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் புதிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தக் கூடாது எனவும் 3.5. 8 ம் வகுப்பு  மாணவ மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும்  முயற்சியை கைவிடக் கோரியும் தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஏழை மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கின்ற கல்வியை மறுக்க கூடாது எனவும்  அதேபோல் கல்வியை தனியாரிடம் விற்பனை செய்யக் கூடாது எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து வலைதளம் கோரிக்கை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


Comments