திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா அடுத்த 10 ஆண்டுகளில் ஆம்பூர் பகுதி வாழவே தகுதியில்லாத நகரமாக மாற்றப்படும் அபாயம் ஒரு புதிய கல்குவாரியால் நடைபெற்று விடக்கூடாது

திருப்பத்தூர் மாவட்டம் 
ஆம்பூர் வடக்கு பகுதி
சான்றோர்குப்பம், பெரியாங்குப்பம்,  சோலூர் பகுதி மக்களின் மேலான கவனத்திற்க்கு..   
ஆம்பூரில் நெல் விளையும் பூமியை பார்த்துள்ளீர்களா? காய்கறிகள் விளையும் நிலத்தை பார்த்துள்ளீர்களா? அப்படி ஒரு நல்ல நீர் மேலாண்மை உள்ள பகுதிதான் வண்ணாந்துரை. இப்பகுதியில் பொதுமக்கள் வாழும்  நிலத்தின் அருகே கல் குவாரி வைத்து மலைகள் பெயர்க்கப்பட்டு நிரம்பு மணல் மணலாய் லாரியில் தினமும் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் அகல பாதாளத்திற்க்கு செல்லும் அபாயம் ஏற்படும். ஆம்பூர் நகரம் முற்றிலும் பாலையாக மாறும். வண்ணாந்துறை பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 20000 மக்களுக்கான குடிநீர் தேவையை நகராட்சி பூர்த்தி செய்து வருகின்ற வேளையில் சத்தமில்லாமல் இயங்கி வருகிறது சோலூர் கல்குவாரி. 
 
திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது வண்ணாந்துறையில் 3 கோடி செலவில் தடுப்பணை கட்ட அரசு ஆவணம் செய்ததுள்ளது. இந்த பகுதியில் பழ தோட்டங்களும் பல்வேறு காட்டு மரங்களும் அமைந்துள்ளது. இவை அனைத்தும் அடுத்த 10 ஆண்டுகளில் காணாமல் சென்று விடும். ஏற்கனவே ஆம்பூர் நகரம் பல்வேறு மாசுக்களால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், இந்த குவாரி விவசாயிகள் மற்றும் பொது மக்களை முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நமது சான்றோர் குப்பம், பெரியாங்குப்பம்,  சோலூர் ஊராட்சியில்  கல் குவாரி அமைக்கும் பணியில் சுமார் 20 பேர் இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தினம் தினம் பாறைகள் வெடி வைத்து தகர்க்க படுகிறது. குவாரியில் 500 மீட்டர் பகுதிக்குள் கிராமத்தின் தேவையான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குளங்கள் பல அமைந்துள்ளது. சோலூர் ஊராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும் மற்றும் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலமும் குவாரிக்கு கையகப்படுத்த பட உள்ளது. எந்த கட்டிடமோ, தொழிற்சாலையோ ஊராட்சியின்  ஒப்புதல் இல்லாமல் செயல் படுத்த முடியாது என்பது அரசின் விதி. அப்படியிருக்க குவாரி வேலை எப்படி தொடங்க பட்டது? யார் யாருக்கு லஞ்சம் கொடுக்க பட்டுள்ளது? கிராமசபை கூட்டத்தில் குவாரி அமைக்க கூடாது என தீர்மானம் போட்டும் அதை செயல்படுத்த தவறுவது யார்?
ஊராட்சியின் ஓப்புதல் சான்று சாதாரண வீடு கட்ட மட்டும் தானா? குவாரிக்கு இல்லையா? பணம் பத்தும் பேசும், மறைமுகமான ஒப்புதலை கூட கொடுக்கும். லட்சங்கள் கைமாறினால் குவாரி என்ன..கிராமத்தின் குடிநீர் கூட நிறுத்தப்படும், குளங்கள் மூட படும், ஊராட்சியின் நிலம் கைமாறும்.. தினமும்  சோலூர் ஊராட்சியின் குவாரி மண்ணை லாரியில் டிப்பர் டிப்பாராக விற்பனை படு ஜோராக நடை பெற்று கொண்டு 
இருக்கிறது. கடந்த சில நாட்களாக குவாரிக்கு தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீருக்காக பூமிக்கடியில் புதைத்து வருகின்றனர்.  

இயற்கை வளங்களை கொள்ளையடித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு எதை கொண்டுப் போய் சேர்க்கப் போகிறீர்கள்? குவாரி நடத்துபவர்களே நாங்கள் கேட்பது உங்களின் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துதான். அவர்கள் என்ன பணத்தையா தின்ன முடியும்? பூமிக்கடியில் வெடி வைத்து எடுக்கப்படும் பாறைகளில் சிலிக்கா எனும் தாது பொருளை சுவாசித்தால் கேன்சர், இதய நோய் மற்றும் சிலிக்கோசிஸ்  எனப்படும் குணப்படுத்த முடியாத வியாதி மக்களுக்கு ஏற்படும். 

இதை பலமுறை கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கவனத்திற்க்கு கொண்டு சென்றும் பலனில்லை. இந்த கல் குவாரிக்கு அரசின்  விதிகளை பின்பற்றாமல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அனைத்து ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே பல்வேறு மாசு சிக்கல்களில் இருக்கும் ஆம்பூர் நகரம் மேலும் மாசடைய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் ஆம்பூரில் உள்ள அத்தனை மக்களும் உங்கள் அடுத்த தலைமுறைக்காக இந்த நல்ல முயற்சியில் ஒன்றினைய வேண்டுகிறோம்.

கொரோனா தடையை கல் குவாரி நிறுவனம் தனக்கு சாதகமாக பயன் படுத்தி விரைவில் முழு வீச்சில் மலையில் உள்ள கனிமங்களை  கொள்ளை அடிக்கும்  முயற்சியை முறியடிக்க ஆம்பூர் நகர மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.இதுகுறித்து ஆம்பூர் வட்டாட்சியர் அவர்களிடம் கேட்டபோது மண் எடுக்க மட்டுமே அனுமதிப்பட்டு இருக்கிறது என்று பதில் கூறினார்.

Comments