ஸ்ரீமுஷ்ணம் . ஜூலை 29 ;
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரதுறை துறை சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் சிறப்பு மருத்துவர் தமிழ்செல்வன் தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் covid19 சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது , இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து , முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர் பொதுமக்கள் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர் , சளி மற்றும் காய்ச்சல் உள்ள நபர்களின் விவரங்களை கேட்டறிந்து உரிய மருந்துகளை வழங்கி காய்ச்சல் தொடர்ந்தால் அரசு மருத்துமனையை அனுகி உரிய பரிசோதனை செய்துகொள்ள அறிவுறித்தினர் .பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மற்றும்
மாத்திரைகள்,கபசுர குடிநீர்
வழங்கினர் .
இம் முகாமில் கிராம சுகாதார செவிலியர் சம்மனசமேரி , அங்கன்வாடி பணியாளர் கன்னிசெல்வி, உதவியாளர் ராஜேஷ்வரி
ஆகியோர் உடனிருந்தனர் .
Comments
Post a Comment