தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் வாட்ஸ்அப் வீடியோ மூலம்

தேமுதிக மாநில பொருளாளர்  பிரேமலதா விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் வாட்ஸ்அப் வீடியோ மூலம் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

சாத்தூர் நவம்பர் 01,சாத்தூரில் தேமுதிக அலுவலகத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ராமர் பாண்டியன் தலைமையில் சாத்தூர்,அருப்புக்கோட்டை ,திருச்சுழி தொகுதியின் நகர ,ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தேமுதிக மாநில பொருளாளர் அண்ணியார் பிரேமலதா ஆலோசனை கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை இரவு  தேமுதிக மாநில பொருளாளர் அண்ணியார் பிரேமலதா அவர்கள் விருதுநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராமர் பாண்டியன் தலைமையில் நடைபெறும் கட்சி வளர்ச்சிப் பணி ஆலோசனை கூட்டத்தில் வாட்ஸ்அப் வீடியோ மூலம்  ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ராமர் பாண்டியன் அவர்களிடம் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து மாநில பொருளாளர் அண்ணியார் பிரேமலதா கேட்டறிந்தார்.வருகிற ஆகஸ்டு 25 ஆம் தேதி கேப்டன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை கேட்டறிந்தார்.
சாத்தூர் தொகுதி அருப்புக்கோட்டை தொகுதி திருச்சுழி தொகுதியில் உள்ள நகர ஒன்றிய நிர்வாகிகள் இடமும் தனித்தனியாக அழைத்து அவர்களிடமும் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து மாநில பொருளாளர் அண்ணியார் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் கட்சியை கிளைக் கழகத்திலிருந்து வலுப்படுத்த அறிவுரை வழங்கினார். கட்சியில் செயல்படாமல் இருக்கும் பழைய நிர்வாகிகளையும் மீண்டும் அழைத்து அவர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கி அவர்களையும் ஊக்கப்படுத்தி கட்சி வளர்ச்சிப் பணியை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தேமுதிக என்பது ஒரு குடும்பம் அதில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் கட்சி வளர்ச்சிப் பணியில் அதிக அக்கறை காட்டவேண்டும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். துடிப்புடன் செயல்படும் தொண்டர்களுக்கு உரிய பதவிகள் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
தேமுதிக கட்சிக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.
தேமுதிக கட்சி வளர்ச்சிப் பணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில பொருளாளர் அண்ணியார் பிரேமலதா அவர்களிடம் சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை தொகுதியில் நகர ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கேப்டன் எப்படி உள்ளார் என்று கேட்டறிந்தனர் அதற்கு அன்னியர் கேப்டன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் உங்கள் அனைவரையும் கேட்டறிந்தார் என்று அண்ணியார் தகவல் சொன்னார்கள்.
தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும்  மகிழ்ச்சியுடனும் கேட்டறிந்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் ராமர் பாண்டியன், அந்தோணி பாண்டியன் சாத்தூர் நகர செயலாளர்,சிங்கராஜ் சாத்தூர் நகரக் கழக துணைச் செயலாளர், ஆரோக்கியராஜ் நகர அவைத்தலைவர்,அக்னி ராஜ் ஒன்றியக் கழக துணைச் செயலாளர், ரெங்கசாமி ஒன்றிய அவைத்தலைவர், வேல்முருகன் ஒன்றிய பிரதிநிதி, கோவிந்தன் அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர், கருப்புசாமி திருச்சுழி ஒன்றிய செயலாளர், முருக குமார் ஒன்றிய அவைத்தலைவர் காரியாபட்டி, மும்தாஜ் மகளிரணி செயலாளர் வெம்பக்கோட்டை, எம் எஸ் பாண்டியன், எஸ் கண்ணன், பால சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி, மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Comments