திருப்பத்தூர் அருகே சுடுகாடு பாதை கேட்டு சாலையில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திகுப்பம் கிராமத்தை லட்சுமி (75)வயது என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியிலுள்ள பாம்பாற்றின் கரையோரம் பல ஆண்டுகளாக  சுடுகாட்டில் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்து வந்துள்ளனர்.

சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துள்ளார்.

இதனால் சுடுகாட்டிற்கு செல்லும்  பாதை இல்லாததால் ஆக்கிரமிப்பை அகற்றி வழிபாதை அமைத்து தரக்கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன் மற்றும் வட்டாட்சியர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து இறந்தவரின் சடலத்தை ஆற்றின் வழியாக எடுத்து  சென்று அடக்கம் செய்தனர்.

சுடுகாடு பாதை கேட்டு சாலையில் சடலத்தை வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால்  அப்பகுதியில்  பரபரப்பு காணப்பட்டது

Comments