வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவர்களால் பரபரப்பு

குமராட்சி
ஜூலை 29
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.   நடைபெற்ற கூட்டத்தில் 57 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள், செயலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஜேஜேஎம் பைப்லைன், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ், மற்றும் 14,15 ல் பைனான்சில் வரக்கூடிய பணிகளை அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்களுக்கே வழங்ககோரி ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து அக்கூட்டமைப்பினர் தெரிவித்ததில்
ஊராட்சி பணிகளை ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு ஒப்பந்தம் விடுவது பஞ்சாயத் ராஜ் சட்டத்திற்கு எதிரானது. மற்றமாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதியா?  எங்களுடைய பிரதான கோரிக்கையான இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வரும் காங்களில்  நடைபெறும்  கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்திருக்கிறோம். இந்தியா முழுமைக்கும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி ஒதுக்கீடு செய்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பணியில் ஒதுக்கவில்லை அதற்கு மாறாக தமிழக அரசு ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் மற்றும் அவர்களின் பினாமிகளுக்கும அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது. இது முற்றிலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது உடனடியாக தமிழக அரசு அனைத்து ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதியைப் பெற்று அந்தந்த ஊராட்சியில் பணிகளை அந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விட வேண்டும்.
என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றோம். கிராமப்பகுதி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரத்தில் குறுக்கிடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதுகுறித்து பலகட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் பலனில்லை எனவே சுயசார்பாக முடிவெடுக்கும் தமிழக அரசை  கண்டித்து தற்போது கூட்டத்தை வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும் வரும் காலங்களில் தொடர்ச்சியாக இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களை ஒருங்கிணைத்து அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments