வேதாரண்யத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வேதாரணியம் ஜூலை 31. 

நாகை மாவட்டம்  வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ..தகுதி வாய்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ...கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நகர்ப்புற குடிசைமாற்று வீட்டுவசதி துறை மூலம் கான்கிரீட் வீடுகளாக மாற்றி தாமதமின்றி முடித்து தர வேண்டும் ...கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் நேரத்தில் மழைக்காலமும் வந்துவிட்டதால் டெங்கு மலேரியா டைபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளதால் முன்கூட்டியே மழைக்கால நோய் வராமல் தடுக்க வேண்டும் ..போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

Comments