திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியை கற்பழித்த காம கொடூரனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஆரிப்கான் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராகுல் வயது (30)
என்பவர் படித்து விட்டு கார்பென்டர் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் மதம் கொண்ட அவர் அப்பகுதியில் உள்ள ஆடு,கோழி உள்ளிட்ட விலங்கினங்களுடன் உடலுறவு வைத்து கொள்வார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் உள்ள வட மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த செய்த நிலையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த அவர் தினமும் மது அருந்திவிட்டு அவரது அப்பா கோவிந்தராஜிடம் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டு வந்து உள்ளார்.
இதனையடுத்து ராகுலுக்கும் அவரது தந்தை கோவிந்தராஜிக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு காரணமாக ராகுலை வீட்டில் வைத்து பூட்டி உள்ளார் அவரது தந்தை கோவிந்தராஜ்.
மதுபோதையில் இருந்த ராகுல் நள்ளிரவு நேரத்தில் இருந்த ராகுல் வீட்டின் ஜன்னலை உடற்பயிற்சி செய்யும் தம்பல்ஸால் உடைத்து வெளியே சென்று உள்ளார்.
அவரது வீட்டின் அருகில் உள்ள மாற்றுத்திறனாளியான மீனா வயது( 65) என்பவருக்கு இரண்டு பையன்கள் ஒருவர் திருப்பத்தூரில் டீ கடை வைத்துள்ள நிலையில் மற்றொருவர் மாற்றுத்திறனாளி
இந்த நிலையில் கணவரை இழந்து வாழ்ந்து வரும் மூதாட்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தனது ஒரு மார்பை இழந்து நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது வீட்டினுள்ளே பெட்டி கடை வைத்து வாழ்ந்து வந்துள்ளார் மூதாட்டி.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராகுல் மூதாட்டி வீட்டிற்கு சென்று தூங்கி கொண்டு இருந்த மூதாட்டி மீனாவிடம் வீட்டின் கதவை தட்டி உள்ளார்.
கதவை திறந்த போது ராகுல் மூதாட்டியை உள்ளே தள்ளி வீட்டு கதவின் உள் பூட்டு பூட்டி மூதாட்டியை கற்பழித்து உள்ளான்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது மூதாட்டி கூச்சலிட்டு உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காமக்கொடூரன் ராகுலை பிடித்து தர்ம அடி கொடுத்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலிசார் ராகுலை கைது செய்து திருப்பத்தூர் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் அருகே புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான 65 வயது மூதாட்டியை கற்பழித்த காமகொடூரன் ராகுலின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment