கொடைக்கானல் அப்சர்வேட்டரி தெரு, கொடைக்கானல் 24−வார்டு பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நடந்து செல்பவர்களும்,பைக்கில் செல்பவர்களும் தான் பாவம்
இதைவிட கொடைக்கானல் பெர்ன்ஹில்சாலை,செண்பகனூர்,இருதயபுரம் சாலை,விநாயகர் ஓடை,சகாயபுரம் பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டமாக திரிகின்றன பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருந்து வருவதால் அப் பகுதி மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இதைவிட கொடைக்கானல் பெர்ன்ஹில்சாலை,செண்பகனூர்,இருதயபுரம் சாலை,விநாயகர் ஓடை,சகாயபுரம் பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டமாக திரிகின்றன பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருந்து வருவதால் அப் பகுதி மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இரவு செக்யூரிட்டி பணி முடிந்தும்,விவசாயப் பணிக்கு சென்று திரும்பும் கூலியாட்கள் நிலை வேதனையாக உள்ளது.
இப் பிரச்சனைக் குறித்து பல முறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்,பணியாளர்களிடம் தெரிவித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை வன விலங்கிற்கு யார் பலியாக போகிறார்களோ? இறைவனுக்குத் தான் தெரியும்.
நகராட்சி வார்டுகளில் கடைசி வார்டு செண்பகனுர் 24−வது வார்டு அது போல வளர்ச்சித் திட்டத்திலும் கடைசி வார்டாக இருக்கிறது. அடிப்படை வசதிகளின்றி சுற்றுலாத் தலமான கொடைக்கானல் நகர்ப் பகுதியிலுள்ள இப்படிப் பட்ட வார்டு பகுதி இருப்பது எந்த அதிகாரிக்கும் தெரியாமல் இருப்பதில்லை ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை காலம் காத்திருக்கிறது கொடைக்கானல் நகர்ப் பகுதிகளிலேயே முன் மாதிரி வார்டுப் பகுதியாக மாறுவதற்கு !
எந்த பிரச்சனைகளையும் வாட்ஸ் அப்பில் வெளியிட வேண்டாம் தகவல் சொன்னால் போதும் உடனடியாக"சரி செய்கிறோம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் ஆனால் இது வரை"எந்த நடவடிக்கையும் எடுக்க மனமில்லை. ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழும்பி உள்ளது. நடவடிக்கை எடுக்குமா சம்மந்தபட்ட நிருவாகம்.
Comments
Post a Comment