கொடைக்கானல் மலை கிராமப்பகுதிகளில் பலா பழ சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.யானைகளை விரட்ட வனதுறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்
கொடைக்கானல் மலை கிராமங்களான பேத்துப்பாறை, அஞ்சு வீடு, பாரதி அண்ணாநகர், பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் தற்போது பலாபழ சீசன் துவங்கியுள்ளது. மலைபகுதிகளில் விளையக்கூடிய இந்த மலை பலா பழம் அதிக சுவை கொண்டதாக உள்ளது. தற்போது கொரோனா எதிரொலியாக பலா பழம் ஏற்றுமதி செய்யமுடியாத காரணத்தால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் மரங்களிலேயே விட்டு விடுகின்றனர். இந்நிலையில் காட்டு யானைகள் அதிகம் விரும்பும் பழமாக இந்த பலா பழம் இருப்பதால் விவசாய தோட்டப்பகுதிகளுக்கு யானைகள் அடிக்கடி இந்த பலா பழங்களை தேடி வருகின்றன.மேலும் விவசாய தோட்டப்பகுதிகளில் வாழை மரங்களை அழித்து நாசம் செய்தும் வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர், மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் இரவு நேரங்களில் சாலைகளில் ஒய்யாரமாக உலா வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரப்பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து கிராமபகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment