வாணியம்பாடியில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்த தலைமை காவலர்

திருப்பத்தூர் மாவட்டம்

வாணியம்பாடியில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்த தலைமை காவலர்க்கு பழக்கூடை கொடுத்து வரவேற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் பாஸ்கர் இவர் வேலூர் பகுதியை சேர்ந்தவர் கொரோனா தடுப்பு பணியில் தமிழக ஆந்திர  சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து மீண்டும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பணிக்கு சேர இன்று வந்தபோது அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார் இதில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி ஆகியோர் உடன் இருந்தனர்