குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம். குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பதற்க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.. குமரி மாவட்டத்தில் கடந்த 1953 ல் 4785 ஹெக்டேரில் அரசு ரப்பர் தோட்டம் என தொடங்கப்பட்டது. 1984 ல் அப்பேதைய முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு ரப்பர் தோட்டங்கள் என்பதை அரசு ரப்பர் கழகம் என பெயர் மாற்றினார். அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார், குற்றியாறு, மருதம்பாறை, கல்லாறு கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.அரசு ரப்பர் கழகத்தில் பால் வடிக்கும் பணியில் நிரந்தர பணியாளர்கள் 943 பேரும், 540 ஒப்பந்த பணியாளர்களும் 50 தொழிற்சாலை ஊழியர்களும் உள்ளனர். ஏற்கனவே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் சுமார் ஆயிரம் ஹெக்டேரை அரசு ரப்பர் கழக நிர்வாகம் வனத்துறை வசம் ஒப்படைத்தது. வனத்துறை தற்போது அந்த பகுதியை தடை செய்துள்ளது. மேலும் தற்போது ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை அரசு ரப்பர் கழகம் வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்க்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதனால் ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பையும் தடை செய்ப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவிப்பார்கள். இதனால் யாரும் உள்ளே செல்ல முடியாது. இதனால் ஐநூறுக்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்க தக்கது. எனவே தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ரப்பர் கழகம் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு குமரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சோ.சுரேஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment