சாத்தூரில் வழக்கறிஞர் வாழ்வாதாரம் வேண்டி ஆடைகளை களைந்து நிர்வாணப் போராட்டம்


சாத்தூரில் வழக்கறிஞர் வாழ்வாதாரம் வேண்டி  ஆடைகளை களைந்து நிர்வாணப்  போராட்டம்

சாத்தூர் ஜீலை 29,சாத்தூரில் வழக்கறிஞர் வாழ்வாதாரம் வேண்டி ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டம். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்றம் வாசலில் வாழ்வாதாரம் வேண்டி வழக்கறிஞர் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.  
 சாத்தூர்  ஆண்டாள்புரத்தை சேர்ந்த நாராயணன் மகன் மணிகண்டன் (40) இவர் எல்எல்பி முடித்து சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.  

மது போதைக்கு அடிமையான வழக்கறிஞர் மணிகண்டன் நீதி மன்றத்திற்கு செல்லாமல் தினமும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.     
இவர்  தினமும் போதையில்  தாய் தந்தையை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் அது சம்பந்தமாக அப்பையநாயக்கன்நட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.   
 தற்போது ஆண்டாள் புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வருவதாகவும் தற்போது கொரோனா  வைரஸ் தாக்கத்தால் வேலை எதுவும் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கபட்டு சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இருப்பதாகவும் ஆகவே அதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டி நீதிமன்ற வாசலில் ஆடைகளை களைந்து நிர்வாணம்மாக  கையில் கோரிக்கை மனு பிடித்து கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டார்.    
 தகவல் அறிந்து சாத்தூர் நகர காவல்துறையினர் அவரை மீட்டு  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Comments