ஸ்ரீமுஷ்ணத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் சார் -ஆட்சியர் நேரில் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் . ஜூலை 31 ;

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 18 பேர் உட்பட, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் ஒரே நாளில் 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில் சிதம்பரம் சார்-ஆட்சியர் விசு மகாஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இணமங்கலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் , பொதுமக்கள் பாதுகாப்பு, தனிமைப்படுத்துதல்,கிருமி நாசினி தெளித்தல் போன்றவைகள் முறையாக நடைபெறுகின்றனவா?என்பதை கேட்டறிந்து, கொரானா தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வட்டாசியர் , சுகாதார அதிகாரிகள் , பேரூராட்சி நிர்வாகம் ஆகியோரிடம் கேட்டறிந்து ,  ஆலோசனை வழங்கி சென்றார். 

இந்த ஆய்வில் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் முகமது அசேன், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், ஸ்ரீமுஷ்ணம் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வருவாய் ஆய்வாளர் குமாரக்கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சரத்பாபு, உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன், மற்றும் வருவாய், சுகாதார துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தூய்மை காவலர்கள் , பேரூராட்சி பணியாளர்கள் என  ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது , இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருவதால் மூன்று நாட்களுக்கு இயங்காமல் மூடி வைக்கப்பட்டுள்ளது .

Comments