விவசாயியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறை முன்பு தர்ணா
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நத்தஅள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சூரப்பன் இவரின் பூர்வீக சொத்து 1 ஏக்கர் 17 சென்ட் அளவு நத்தஅள்ளியில் உள்ளது. அவருக்கு இரண்டு மகன்கள் ராஜா கண்ணன் உள்ள நிலையில் இருவரும் பூர்வீக சொத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு வருமையின் காரணமாக ராஜா தன் 44 சென்ட் நிலத்தை காவேரிபட்டணத்தை சேர்ந்த செல்லமுத்து என்பரிடம் விற்பனை செய்துள்ளனர். தவறுதலாக பூர்விக 1 ஏக்கர் 17 சென்ட் நிலமும் உடைய சொத்து சர்வே எண் அதில் பதிவு செய்துள்ளது தெரியமால் கையொப்பம் இட்டுள்ளனர். கடந்த 3ம் மாதம் செல்லமுத்து என்பவரிடம் இருந்து மல்லாபுரத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் வாங்குவதாகவும் அதில் பிழை திருத்தம் உள்ளதாகவும் கூறி சூரப்பன் மற்றும் அவரின் மகன் ராஜாவை தருமபுரி பத்திரபதிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று இவரின் முழு செர்தையும் அவரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இரத்தினவேல் ராஜா மற்றும் அவரின் சகோதரர் கண்ணன் ஆகியோரிடம் நிலம் என்னுடையது நீங்கள் இடத்தை விட்டு காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் கண்ணன் என்பவருக்கும் அவரின் சகோதரர் ராஜாவுக்கும் அதிர்யடைந்தனர். பின்னர் பத்திரத்தில் தவறுதலாக ராஜா மற்றும் அவரின் தந்தை சூரப்பன் கையொம்மிட்டததை அறிந்து ராஜா தன் வீட்டில் சோகமாக காணப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை தன் வீட்டின் அருகெ உள்ள வேப்பமரத்தில் அதிகாலை தன் அணிந்திருந்தா லூங்கியில் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டார். துகவலறிந்து வந்த உறவினர்கள் ஊர்மக்கள் இண்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஊர் மக்கள் இண்டூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் புகார் மனுவினை அளித்தனர். பின்னர் அங்கிருந்து தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே பிரேதத்தை வாங்குவதாக பிணவறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் இடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.