அகில பாரத சத்திரிய மகாசபா சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன், வன்னிய குரு பூஜை நடந்தது

அகில பாரத சத்திரிய மகாசபா சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன், வன்னிய குரு பூஜை நடந்தது.
இதில், மாவட்ட தலைவர் குப்பூர் ஆறுமுகம் பேசியதாவது:
வன்னிய சமுதாய மக்களுக்காக, 1929ல், தென்னகத்தில் வாழும் அக்னிகுலத்தவர்கள் மற்றும் வன்னியர்கள் மட்டுமே சத்திரியர்கள் என்று அரசானை பெற்றவர் அர்த்தநாரீத வர்மா. இவர் சேலத்தில் பிறந்து, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்,  மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை கற்று, வான சாஸ்திரம் மற்றும் நிலவியல், மரபுசார் மருத்துவத்தில் புலமை பெற்றவர். மேலும், சுதந்திர போராட்டத்தில் ராஜாஜி மற்றும் காந்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்திரியன், சத்திரிய சிகாமணி, தமிழ் மன்னன், வீரபாரதி ஆகிய பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இந்நிலையில், இவரின், 147 பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். ஜூலை, 27, 1874 ல் பிறந்து, 1964ல் திருவண்ணாமலையில் இறந்தார். அவரின் பிறந்தநாளான இன்று, அரசு விழாவாகவும், சேலத்தில் அவருக்கு சிலை நிருவ வேண்டும். இவர் இறந்த திருவண்ணாமலையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசிானர்.
மாவட்ட இணை செயலாளர் திருமாவளவன், நிர்வாகிகள் தனிகாசலம் மற்றும் பெருமாள் உள்பட, பலர் இதில் கலந்து கொண்டனர்.